இலங்கையின் சுதந்திர தினமான நேற்று நள்ளிரவு யாழில் நடந்துள்ள சம்பவம்

இலங்கையின் சுதந்திர தினமான நேற்று நள்ளிரவு யாழில் நடந்துள்ள சம்பவம்

வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்ததில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இந்த சம்பவம் யாழ்ப்பாணம், உடுவில் ஆலடிப் பகுதியில், இலங்கையின் சுதந்திர தினமான நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தினால் வீட்டில் இருந்தவர்களின் உயிர்களுக்கு சேதம் ஏற்படவில்லை என்றும், வாகனங்களே தீக்கிரையாகி உள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மோட்டார்சைக்கிள்கள் உட்பட பல பொருட்கள் இந்த சம்பவத்தால் தீக்கிரையாகியுள்ளன.

அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த தீ வைப்பு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like