வீட்டுக்குள் மர்மமாக இறந்து கிடந்த நபர் – சடலம் மீட்பு

மிகிந்தலை பிரதேசத்தில் வீடொன்றுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சீப்புகுளம் சந்தி பகுதியை சேர்ந்த 37 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் தனது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் தண்டனை அனுபவித்து சில மாதங்களுக்கு பிணையில் விடுதலையானவர் என தெரியவருகிறது.

இந்த சம்பவம் குறித்து மிகிந்தலை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

You might also like