முல்லைத்தீவில் வீட்டிற்குள் நுழைந்த இராட்சத உருவத்தை மடக்கி பிடித்த பொலிஸார்!

முல்லைத்தீவில் வீட்டிற்குள் நுழைந்த இராட்சத உருவத்தை மடக்கி பிடித்த பொலிஸார்!

முல்லைத்தீவு – மாங்குளம் – ஓலுமடு பிரதேசத்தில் வீட்டினுள் நுழைந்த இராட்சத முதலையொன்று காவற்துறையினர் , வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் நேற்று பிற்பகல் இந்த முதலை நுழைந்துள்ளது. பின்னர் காவற்துறைக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்ட பின்னர் , அங்கு காவற்துறையினர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் விரைந்தனர். அவர்கள் வந்து முதலையை தேடிய போது வீட்டில் முதலை இருக்கவில்லை.

பின்னர் , வீட்டிற்கு அருகில் உள்ள வீதியொன்றில் இருந்து குறித்த முதலை பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 12 அடி நீளம் கொண்ட இந்த முதலை பிடிக்ககப்பட்டதன் பின்னர் , அருகில் அமைந்துள்ள நீர்த்தேக்கமொன்றில் விடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

You might also like