வவுனியாவில் தமிழ் பாடசாலையொன்றை பாராட்டிய இலங்கை அமைச்சர்!

வவுனியாவில் தமிழ் பாடசாலையொன்றை பாராட்டிய இலங்கை அமைச்சர்!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் மகாவித்தியன் தின நிகழ்வை எண்ணி மகிழ்வுறுகின்றேன் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சரும் முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

வவுனியாவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (3.2) தனிப்பட்ட விஜயமாக வருகை தந்த அமைச்சர், வவுனியா மாவட்ட துடுப்பட்ட சங்கத்தினரை சந்தித்ததன் பின்னர் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மகாவித்தியன் தின நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார்.

அங்கு பழைய மாணவர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில், பாடசாலை பழைய மாணவர்களால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான ஒரு நிகழ்வில் கலந்துகொண்டமை சிறப்பாக எண்ணுகின்றேன். எங்கும் காணாத ஒரு சிறந்த நிகழ்வாக உள்ளது. இவ்வாறான நிகழ்வுகளை நடத்தப்படுவதனூடாக பாடசாலையின் அபிவிருத்தி மட்டுமல்ல அதன் தனித்துவத்திற்கும் சிறப்பானது என தெரிவித்திருந்தார்.

இதேவேளை நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் பழைய மாணவர்கள் மத்தியின் இடம்பெற்ற துடுப்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கான கிண்ணத்தினையும் வழங்கி வைத்திருந்தமை சிற்பம்சமாகும்.

You might also like