இளம் நடிகை தூக்கு போட்டு தற்கொலை.. பரபரப்பு பின்னணி தகவல்

இளம் நடிகை தூக்கு போட்டு தற்கொலை.. பரபரப்பு பின்னணி தகவல்

இளம் நடிகை நாக ஜான்சி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நாக ஜான்சி (21).

இவர் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஜான்சியின் சகோதரர் இன்று காலை அவர் வீட்டு கதவை வெகுநேரமாக தட்டியும் திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்து போது ஜான்சி தூக்கில் சடலமாக தொங்கியபடி கிடந்தார்.

இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஜான்சியின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜான்சி இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததும், சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்ததும் தெரியவந்தது.

காதலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அவர் இம்முடிவை எடுத்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

ஜான்சியின் செல்போனை கைப்பற்றியுள்ள பொலிசார் அதை வைத்து தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

 

You might also like