அனைத்து பயனர்களுக்கும் முகநூல்(Facebook) அறிமுகம் செய்துள்ள புதிய வசதி

அனைத்து பயனர்களுக்கும் முகநூல்(Facebook) அறிமுகம் செய்துள்ள புதிய வசதி

பேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

இவ் வசதியை பயன்படுத்தி குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டு 10 நிமிடங்களுக்குள் அழிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.

இப் புதிய வசதிக்கு Remove For Everyone எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தவறுதலாக அனுப்பப்படும் செய்திளை இவ் வசதியினைக் கொண்டு அழித்துவிட முடியும்.

எனினும் குறுஞ்செய்தி ஒன்று அழிக்கப்பட்டுள்ளதாக குழுவில் உள்ளவர்களுக்கு காண்பிக்கும்.

இவ் வசதியானது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் பரீட்சிக்கப்பட்டு வந்தது.

அதுமாத்திரமன்றி Poland, Bolivia, Colombia மற்றும் Lithuania போன்ற நாடுகளில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது உலகளவிலுள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கக்கூடியவாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

You might also like