காதலுக்கு ஏன் இந்த குறியீடுகளையெல்லாம் ஒப்பிடுகிறோம் என்று தெரியுமா? சுவாரசியமான தகவல்..!

காதலுக்கு ஏன் இந்த குறியீடுகளையெல்லாம் ஒப்பிடுகிறோம் என்று தெரியுமா? சுவாரசியமான தகவல்..!

காதல் என்றவுடன் நினைவுக்கு வரும் விஷயம் ரோஜா, ஹார்ட், சாக்லெட் இப்படி பல அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் சம்மந்தமே இல்லாமல் ஏன் இந்தக் குறியீடுகள் காதலோடு ஒப்பிடப்படுகிறது என யோசித்ததுண்டா? நிச்சயம் சம்மந்தம் இருக்கிறது.

காதலர்கள் வேலண்டைன்ஸ் என அழைக்கக் காரணம்

ரோம பேரரசில் காதலித்துத் திருமணம் செய்யத்தடை இருந்தது. அதை எதிர்த்து வேலண்டைன் என்னும் பாதிரியார் காதலை ஆதரித்து பல இளைஞர்களுக்குக் காதல் திருமணம் செய்து வைத்தார். அதனால் பிப்ரவரி 14 கி.பி 270-ல் அவர் தூக்கிலிடப்பட்டார். அவர் இறந்த நாளை வேலண்டைன் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதனால் காதலர்களும் வேலண்டைன்ஸ் என அழைக்கப்படுகிறார்கள்.

ஹார்ட் சிம்பிள் வரக் காரணம்

பொதுவாக அன்பை வெளிப்படுத்த இதயத்தின் குறியீடை அனுப்புவோம். ஆனால் இதயத்திற்கு சம்மந்தமே இல்லாத அந்த ஹார்ட் குறியீடு எப்படி வந்தது தெரியுமா?

ஆராய்ந்ததில் வட ஆப்ரிக்க கடற்கரைப் பகுதிகளில் வளரக் கூடிய ‘சில்ஃபியம்’ என்னும் செடியின் பூக்கள், விதைகள் ஹார்ட் ஷேப்பில் தான் இருக்குமாம். ஒருவேலை அதை வைத்துதான் ஹார்ட் காதலுடன் ஒப்பிடப்படுகிறதோ என்கிற பேச்சு இருக்கிறது. பின் மனித உடல் உறுப்புகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. உடலுறவின் குறியீடாகவும் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ரோஜா பூக்கள் கொடுக்கக் காரணம்

விக்டோரியா காலத்தில் பெண்கள் தங்களின் ஆசைகள், எண்ணங்களை வெளிப்படுத்த ஒவ்வொரு வண்ண ரோஜா பூவைத் தருவார்களாம். உதாரணமாக சிவப்பு ரோஜாவை தந்தார்கள் என்றால் கணவர் ரொமாண்டிக் மூடில் வர வேண்டும் என்று அர்த்தமாம். இதேபோல்தான் வெள்ளை, மஞ்சள் ரோஜாக்களுக்கும் அர்த்தம்.

சிவப்பு நிற ஆடை அணியக் காரணம்

மனநல ஆய்வாளர்கள் ஆய்வு செய்ததில், சிவப்பு நிறம் பாலியல் உணர்வைத் தூண்டும் நிறம் எனக் கண்டறிந்துள்ளனர். எனவே சிவப்பு நிற ஆடையில் காதலியோ, காதலனோ எதிரே வரும் போது எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுமாம். அதற்காகத்தான் சிவப்பு நிற ஆடை அணியப்படுகிறது.

You might also like