தமிழருடன் காதல் வயப்பட்ட வெளிநாட்டு ஆண்: மாலை மாற்றி நடந்த திருமணம்

தமிழருடன் காதல் வயப்பட்ட வெளிநாட்டு ஆண்: மாலை மாற்றி நடந்த திருமணம்

சென்னையை சேர்ந்த வினோத் பிலிப் என்பவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வின்சென்ட் இலாரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய வினோத் 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸிற்கு சென்றுள்ளார்.

அங்கு, வின்சென்ட் என்பவருடன் பழகியதன் மூலம் இருவருக்குள்ளும் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் இருவரும் பிரான்சில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்தியாவிலும் ஓரின சேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பு வந்து 5 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இவர்கள் மும்பையில் தங்களின் திருமண வரவேற்பை நடத்தியுள்ளனர்.

அதன்படி இவர்களது திருமண வரவேற்பு மும்பை காஞ்சூர்மார்க்கில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து கோலாகலமாக நடந்தது. அப்போது இருவரும் உற்சாகமாக மாலை மாற்றிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். விருந்து நிகழ்ச்சிகளும் களை கட்டின.

 

You might also like