வீடு முழுவதும் திடீரென பரவிய தீ: மகள்களை காப்பாற்றிவிட்டு பரிதாபமாக பலியான தந்தை!

வீடு முழுவதும் திடீரென பரவிய தீ: மகள்களை காப்பாற்றிவிட்டு பரிதாபமாக பலியான தந்தை!

அமெரிக்காவில் திடீரென தீ பற்றி எறிந்த வீட்டில் செல்ல பிராணியை மீட்க சென்ற நபர், தீயில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மேய்ன் மாகாணத்தை சேர்ந்த சாம் கிராபோர்ட் (40) என்பவர் தன்னுடைய இரண்டு மகள்கள் லில்லியன் (9) மற்றும் எலா (5) உடன் வசித்து வருகிறார்.

கடந்த திங்கட்கிழமையன்று இவருடைய வீட்டில் திடீரென தீ பற்றி எரிந்ததில் உடல் கருகி பரிதாபமாக பலியாகியிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், சம்பவம் நடைபெற்ற அன்று சாம் குடும்பத்தாருடன், 26 வயதான கஸ்ஸாண்ட்ரா மோர்ஸ் மற்றும் 19 வயதான அலெக்ஸ் சாஃபி ஆகியோரும் வீட்டினுள் இருந்திருக்கின்றனர்.

திடீரென பற்றிய தீ வீடு முழுவதும் பரவியதால், அனைவரையும் அழைத்துக்கொண்டு சாம் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.

தன்னுடைய மகள்களை பக்கத்து வீட்டில் தங்கவைத்த சாம், தன்னுடன் வளர்ப்பு நாய் இல்லாததை அப்பொழுது தான் உணர்ந்து தீப்பிடித்த வீட்டிற்கு மீண்டும் சென்றிருக்கிறார்.

ஆனால் இதுகுறித்து அறியாத குடும்பத்தார், சாம் வெளியில் சென்றிருப்பார் என நினைத்துக்கொண்டிருந்துள்ளனர்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், எரிந்து சாம்பலான வீட்டை சோதனை மேற்கொண்ட போது சாம் உடல் கருகிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது குடும்பத்தார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

You might also like