குளத்திலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு
நுவரெலியா பகுதியில் உள்ள குளத்தில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி 16 வயதுடைய பாடசாலை மாணவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த சிறுமியின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த சிறுமி நேற்றைய தினம் காணாமல் போயிருந்தார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.