கிளிநொச்சி பொதுச் சந்தையிலுள்ள கடைத் தொகுதிகள் விசமிகளால் உடைப்பு!

கிளிநொச்சி பொதுச் சந்தையிலுள்ள கடைத் தொகுதிகள் விசமிகளால் உடைப்பு!

கிளிநொச்சி பொது சந்தையில் எட்டு கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் தமது வர்த்தக நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு உரிமையாளர்கள் வீடு திரும்பிய பின்னரே சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொது சந்தையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வியாபார பகுதியிலிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like