யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள தமிழர்களுக்கு ஆபத்து!

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள தமிழர்களுக்கு ஆபத்து!

2009ஆம் ஆண்டிற்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாட்டிற்கு சென்ற அனைத்து பொது மக்கள் தொடர்பில் பொலிஸாரினால் இந்த நாட்களில் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிபொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆவா குழுவை சேர்ந்த பாரிய அளவிலானவர்கள் கடந்த காலங்களில் வெளிநாடு சென்றதன் காரணமாகவே இந்த தகவல் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு தற்போது கிடைத்துள்ள தகவல்களுக்கமைய யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவில் இருந்து பல்வேறு குற்றச்செயல்களுக்கு தொடர்புடைய 65 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்.

ஆவா குழுவை இயக்கும் நபர் சுவிட்ஸர்லாந்தில் இயக்குவதாக அண்மையில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

எப்படியிருப்பினும் இந்த நாட்களில் ஆவா குழு செயற்பாட்டாளர்கள் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாகவும், அனைவரும் இந்த நாட்களில் வெளிநாடுகளில் தஞ்சமடைவதாக வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிபொலிஸ் மா அதிபருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த காரணத்திற்கமைய வெளிநாடுகளில் உள்ள ஆவா குழு உறுப்பினர்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக இந்த நாட்களில் யாழ்ப்பாணம் முழுவதும் தகவல் சேரிக்கப்பட்டு வருகின்றரு.

இதேவேளை, ஆவா குழு தொடர்பில் தகவல் அறிந்தால் அறிவிக்குமாறு பொது மக்களுக்கு பொலிஸார் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

You might also like