குடிபோதையில் நண்பரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபர் கைது

குடிபோதையில் நண்பர் ஒருவரை கொலை செய்தவரை ஹொரணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹொரணை மீமன பாலன பாடசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றின் பின்புறத்தில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் கொலை செய்த நபருடன் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளார்.

மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட முரண்பாட்டினால் மோதல் வெடித்து கூரிய ஆயுதமொன்றின் தாக்குதலுக்கு இலக்காகி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

கழுத்து பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மதுபானம் அருந்திய வீட்டின் உரிமையாளரே கொலை செய்துள்ளதாகவும் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கூலி வேலை செய்யும் நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஹெரணை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like