மெல்லிய இடை அழகு வேண்டுமா?.. இந்த 2 விடயங்களை செய்யுங்கள்

மெல்லிய இடை அழகு வேண்டுமா?.. இந்த 2 விடயங்களை செய்யுங்கள்

மெல்லிய இடை அழகை பெறுவதற்கு இடையூராக உள்ள கெட்டக் கொழுப்புகளை நம் உடலில் இருந்து வெளியேற்ற எளிமையான 2 உடற்பயிற்சியை பின்பற்றினாலே போதும்.

ஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ் (Hip twister Stick Workouts)

இந்தப் பயிற்சியை செய்வதற்கு முன் தங்களின் உயரத்திற்கு ஏற்ற குச்சியை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இரண்டு கால்களையும் அகட்டி, கைகளைப் பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்குப் பின்புறம் பிடித்தவாறு நின்று வலது கை மற்றும் காலை தொடுவது போல் வளைத்து, திரும்ப வேண்டும். இதேபோல் 20 முறை செய்து இடது பக்கமும் செய்ய வேண்டும்.

பலன்கள்
  • இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்புகள் குறையும்.
  • இடுப்பில் உள்ள நரம்புகள் வலுமையாகும்.
  • இடுப்பு மற்றும் வயிற்று பகுதிகள் மெலியும்.
சைடு வே ஹேண்ட் ஸ்ட்ரெச்சிங் (Side Way Hand Stretching)

இந்த பயிற்சியை செய்வதற்கு, முதலில் கால்களை அகலமாக வைத்துக் கொண்டு, நிமிர்ந்து நின்று இரண்டு கைகளையும் மேல்நோக்கி உயர்த்தியபடி, வலது கையின் மணிக்கட்டுப் பகுதியை, இடது கையால் இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

பின் இரண்டு கைகளும் காது பகுதியை ஒட்டியவாறு வைத்து, மூச்சை அடி வயிறு வரை இழுத்து வலது மற்றும் இடது புறம் கையை முழுமையாகக் கொண்டு செல்ல வேண்டும்.

பலன்கள்
  • உடலில் உள்ள நரம்புகள் அனைத்தும் வலுமையாகும்.
  • அடிவயிற்று பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

You might also like