இரணைமடு குளத்தில் விடப்பட்ட ஐம்பதாயிரம் மீன்குஞ்சுகள்

இரணைமடு குளத்தில் விடப்பட்ட ஐம்பதாயிரம் மீன்குஞ்சுகள்

57வது படைப்பிரிவினால் இரணைமடு குளத்தில் ஐம்பதாயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு நேற்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது. 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் ஜானக ரணசிங்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன் போது இரணைமடு குளத்தில் குறித்த மீன்குஞ்சுகள் விடப்பட்டன. குறித்த நிகழ்வில் நன்னீர் மீனவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

You might also like