வடமராட்சியில் வாளுடன் நடமாடிய நபர் கைது!

யாழ்.அல்வாய் பகுதியில் வாளுடன் நடமாடி மக்களை அச்சுறுத்தி வந்த பிரதான நபரை தாம் கைது செய்துள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அல்வாய் பகுதியில் 2015ம் ஆண்டு குடும்பஸ்தர் ஒருவரை கல்லால் அடித்துக் கொலை செய்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் பிணையில் வந்த பிரதான நபர் இவ்வாரம் இருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியதுடன் ஊருக்குள் வாளுடன் நடமாடி மக்களை அச்சுறுத்தியதனால் பொதுமக்கள் ஆலயம் ஒன்றில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை கடும்பிரயத்தனத்தின் மத்தியில் அல்வாய்ப் பகுதியில் வைத்து அப்பிரதான நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அவரை இன்று நீதவான் முன்னிலையில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like