சற்று முன் வவுனியாவில் வீட்டிலிருந்து கிராம சேவையாளரின் மகனின் சடலம் மீட்பு

சற்று முன் வவுனியாவில் வீட்டிலிருந்து கிராம சேவையாளரின் மகனின் சடலம் மீட்பு

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (17.04.2019) மதியம் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் கிராம சேவையாளரின் மகனின் சடலத்தினை பொலிஸார் மீட்டேடுத்துள்ளனர்.

உறவினர்கள் அனைவரும் நகரத்திற்கு சென்றிருந்ததுடன் தந்தையார் (கிராமசேவையாளர்) கடமை நிமித்தம் அவரது பணிக்கு சென்றிருந்த சமயத்தில் சடலமாக மீட்கப்பட்ட குறித்த இளைஞன் தனிமையில் பண்டாரிக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்துள்ளார்.

மதியம் 11.30 மணியளவில் தந்தை மகனுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டிருந்த சமயத்தில் மகன் தொலைபேசி அழைப்பினை எடுக்கவில்லை .

இதனையடுத்து குறித்த தந்தை (கிராம சேவையாளர்) வீட்டிற்கு சென்று மகனின் அறைக்கு சென்ற சமயத்தில் மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கா.போ.த உயர்தரம் இறுதியாண்டு மாணவனாவார்.

You might also like