குடித்ததும் மயங்கிவிட்டேன்…. அதன்பின் எனக்கு என்ன நடந்தது என தெரியாது: குப்பை பொறுக்கும் சிறுமி வாக்குமூலம்

குடித்ததும் மயங்கிவிட்டேன்…. அதன்பின் எனக்கு என்ன நடந்தது என தெரியாது: குப்பை பொறுக்கும் சிறுமி வாக்குமூலம்

திருவள்ளூர் அருகே உள்ள அதிகத்தூர் ஏரிக்கரையில் மூன்று ஆண்களால் தனியாக இறக்கிவிடப்பட்ட சிறுமி குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் ஏரிக்கரையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த ஆட்டோ நின்றது. ஆட்டோவிலிருந்து இறங்கிய மூன்று பேர், சிறுமி ஒருவரை கைத்தாங்கலாகக் கீழே இறக்கினர்.

பின்னர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றனர். இதனைபார்த்த தொழிலாளர்கள், வேகமாக ஓடிச்சென்று ஆட்டோ ஓட்டுநர்களில் இரண்டு பேரை விரட்டிபிடித்தனர். மயக்க நிலையில் இருந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருவள்ளூரை அடுத்த பட்டறை கிராமத்தில் குப்பைகளை பொறுக்கி அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் சாப்பிட்டு வந்துள்ளார் சிறுமி. இதனை தொடர்ந்து கவனித்த வந்த ஆட்டோ ஓட்டுநர்கள், சிறுமியிடம் நைசாக பேசி அழைத்து சென்று இப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமி அளித்த வாக்குமூலத்தில், ஆட்டோ டிரைவர்கள் கூல்டீரிங்க்ஸ் வாங்கி கொடுத்தனர். அதைக் குடித்த பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள், கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

ஏகாட்டூர் பகுதியைச் சேர்ந்த பூபாலன், அதிகத்தூரை சேர்ந்த முனுசாமி ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளோம். இந்த வழக்கில் இன்னொருவரைத் தேடிவருகிறோம். சிறுமியின் உறவினர்கள் குறித்து விசாரித்துவருகிறோம் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

You might also like