முறிகண்டியில் விபத்துக்குள்ளான பேருந்து! ஒருவர் வைத்தியசாலையில்

முறிகண்டியில் விபத்துக்குள்ளான பேருந்து! ஒருவர் வைத்தியசாலையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி – செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த விபத்தில் தெய்வாதீனமாக ஒருவர் மாத்திரமே சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிக வேகம் காரணமாக குறித்த பேருந்து பாதையை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகி இருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.

பாதையை விட்டு விலகிய பேருந்து ஏ9 வீதியிலுள்ள கனகாம்பிகை குளத்திற்குள் குடைசாய்ந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You might also like