கிளிநொச்சி கர்தாய் மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்

கிளிநொச்சி கர்தாய் மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்

கிளிநொச்சி கர்தாய் மக்கள் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணியிலிருந்து மக்களிற்கு வழங்கப்பட்ட காணியில் நேற்று முந்தினம் மக்கள் தற்காலிக கொட்டகைகளை அமைத்து குடியேறியிருந்தனர்.

குறித்த காணியை தென்னை பயிர்செய்கை சபை தமது என கூறி பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், தமது காணியென தெரிவித்து மக்கள் அங்கு குடியேறினர்.

குறித்த விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் தலைமையில் நேற்று 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கீழ்வரும் விடயங்கள் இடம்பெற்று மக்கள் அந்த காணியில் குடியமர எவமும் இடையூறு ஏற்படுத்த வேண்டாம். தெங்கு பயிர்ச்செய்கை சபை சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரத்நாயக்க, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் கனகராஜ், காணி சீர்திருத்த ஆணைக்குழு, தெங்கு பயிர்ச்செய்கை சபை பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த காணி விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மற்றும் சிபாரிசுகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

குறித் காணியை உரிமை கோருவதற்கு தெங்கு அபிவிருத்தி சபைக்கு அதிகாரம் இல்லை எனவும், அது மக்களிற்கே வழங்கப்பட வேண்டும் என்பதையும் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,

குறித்த காணி மக்களுக்குரியது. மக்கள் நேற்று குறித்த பகுதியில் குடியேறியுள்ளனர். அவர்கள் தமது காணியில் குடியேறியுள்ளனர்.

தெங்கு அபிவிருத்தி சபையினர் குறித்த காணி தமது என தெரிவித்தால் சட்ட ரீதியாக அணுகுமாறு அவர் குறிப்பிட்டார். குறித்த விடயம் தொடர்பில் மக்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறித் விடயம் தொடர்பில் வருகை தந்திருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் கருத்து தெரிவிக்கையில்,

நாம் நேரடியாக குறித்த காணி விடயம் தொடர்பில் தலையீடு செய்யமாட்டோம். சமாதானத்திற்கு இடையூறு இல்லாத வகையில் அரச திணைக்களங்கள் தமது நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

காணி உரிமம் தொடர்பில் பொலிஸார் எவ்வித நடவடிக்கையையும் கையாளாது எனவும், சமாதானத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு பொலிஸார் பார்த்துக்கொள்வர் எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் இவ்வாறு இருக்க நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த தடையுத்தரவிற்கமைய அப்பகுதியில் மக்களை தங்கியிருக்க வேண்டாம் என பொலிஸார் அவர்களை நேற்று அந்த பகுதியில் இருந்து வெளியேற்றியிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

You might also like