கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன்

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன்

கிளிநொச்சி – அறிவியல் நகர் பகுதியில் 19 வயதுடைய இளைஞன் ஒருவனை காணவில்லை என கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் நகர் பகுதியில் வசித்து வந்த சத்திய சீலன் சத்திய ராஜ் என்ற இளைஞனே கடந்த (15/04/2019) திகதியிலிருந்து இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த இளைஞன் தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற நிலையில் எங்கும் தேடியும் இன்று வரை வீடு திரும்பவில்லை என காணாமல்போயுள்ள இளைஞனின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

You might also like