சவுதியில் பணிபுரியும் ஆறு இலங்கையர்களை காணவில்லை!

இலங்கையிலிருந்து சவுதி அரேபியாவுக்கு பணிபுரிவதற்குச் சென்ற அறுவரை காணவில்லையென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பணியனத்தின் ஊடக பேச்சாளர் நலின் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2004  தொடக்கம் 2014 ஆம் ஆண்டுக்கிடையில் சவுதி சென்றவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இதில் அக்கரப்பத்தனையைச் சேர்ந்த எம்.எச்.ரிப்னாஸ், ரத்கபுரவைச் சேர்ந்த ஏ.எஸ்.எம்.சுஜஹன், கிரியுல்லவைச் சேர்ந்த பி.ஜி.காமனி, அதிமலே பகுதியைச் சேர்ந்த கே.பி.கே.சந்திரவதி, கல்லடியைச் சேர்ந்த என்.எப்.ரீடா மற்றும் கலேன்பிந்துவெவ பகுதியைச் சேர்ந்த மொஹமட் ரியாஷ் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் குறித்த காணமல் போயுள்ளவர்கள் தொடர்பில் தகவல் தெரியுமாயின், சவுதியில் பணிபுரிபவர்கள் மற்றும் மக்கள் 011 4379328  என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

You might also like