மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு… வெளியான பகீர் தகவல்

மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு… வெளியான பகீர் தகவல்

தமிழகத்தில் மனைவியை கொடூரமாக கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த ஒலக்காசி ரோடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் மதிவாணன். இவருக்கும் கனிமொழி(37) என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.

இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவ தினத்தன்று துக்குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் மதிவாணன் தகராறு செய்துள்ளார்.

அப்போது கனிமொழி பணம் தராத ஆத்திரத்தில் அவரை கொடூரமாகத் தாக்கிய மதிவாணன், மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீ வைத்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளார்.

கனிமொழியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அப்போது மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பலனின்றி கனிமொழி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, குடியாத்தம் பொலிசார் வழக்குப்பதிவுசெய்து, தலைமறைவாக இருந்த மதிவாணனை வலைவீசித் தேடி வந்த நிலையில், இன்று காலை பேரணாம்பட்டு கொண்டமல்லி சுடுகாட்டில் உள்ள மரக்கிளையில், மதிவாணன் வேட்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மனைவியை எரித்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like