மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட இளம் கோடீஸ்வரர்: பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்

மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட இளம் கோடீஸ்வரர்: பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்

உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி திவாரி மகனும், கோடீஸ்வரருமான ரோகித் திவாரி மாரடைப்பால் இறந்தார் என கூறப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் வசித்து வந்த ரோகித் திவாரி கடந்த 16ஆம் திகதி தனது வீட்டில் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி கிடந்தார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

ரோகித் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ரோகித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது, அதன் முடிவில் அவரின் கழுத்து நெரிக்கப்பட்டதும், அவர் மூச்சுத்திணறி இறந்ததும் தெரியவந்துள்ளது.

அவர் தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.

அதற்கேற்றார் போல அவர் வீட்டில் இருந்த ஒரு தலையணையில் ரத்த கறை இருப்பதை பொலிசார் கண்டுப்பிடித்துள்ளனர்.

இது தொடர்பாக ரோகித் வீட்டில் உள்ள சிசிடிவி கமெரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் பொலிசார் ரோகித் மனைவி மற்றும் அவர் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like