வேலைத்தேடி சென்ற பெண்ணை 25 ஆண்கள் ஒரு மாதங்களாக பாலியல் வல்லுறவு

இந்தியாவின் கேரள மாநிலத்தில் வேலைத்தேடி வந்த 26 வய­தான பெண் ஒரு­வரை வீட்டில் ஒரு மாத கால­மாக தடுத்து வைத்து 25 பேர் பாலியல் வல்­லு­ற­வு படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்­ற­வா­ளிகள் கைதா­காமல் தப்­பிக்க 1.75 கோடி ரூபா  பொலிஸ் அதி­காரி இலஞ்சம் வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வேலைக்காக கேரள மாநிலம் கோட்­டயம் அருகே உள்ள மூவாற்­றுப்­புழா பகு­தியை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் கொச்­சிக்கு சென்­றவேளையில், தனியார் நிறு­வ­னத்தில் வேலை வாங்­கித்­த­ரு­வ­தாக கூறியொருவர், அழைத்து சென்­றுள்ளார்.

அப்­போது அந்த நிறு­வ­னத்தின் உரி­மை­யாளர் வேலை தரு­வ­தாக கூறி அவரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யுள்ளார்.

பின்னர் கொச்­சியில் அடுக்கு மாடி குடி­யி­ருப்பில் அடைத்து வைத்து சுமார் ஒரு மாதம் 25 பேர் மாறி மாறி பலாத்­காரம் செய்­துள்­ளதாகவும்,இத­னை­ய­டுத்து அங்­கி­ருந்து தப்­பிய இளம் பெண் கொச்சி பாலா­ரி­வட்டம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

பொலிஸ் விசா­ர­ணையில் இளம் பெண்ணை பலாத்­காரம் செய்த 25 பேரையும் கண்­ட­றிந்த பொலிஸ் அதிகாரி விஜயன் அவர்­களை கைது செய்­யாமல் இருக்க ஒவ்­வொ­ரு­வ­ரி­டமும் தலா 7 இலட்சம் வீதம் மொத்தம் 1.75 கோடி ரூபா இலஞ்சம் பெற்­றுள்ளார்.

மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடினை பதிவு செய்­யாமல் இருந்துள்ளார். இந்த விபரம் கொச்சி தனிப்­பி­ரிவு பொலி­ஸூக்கு தெரிய வந்ததையடுத்து பொலிஸ் அதிகாரி விஜயனை பதவிநீக்கம் செய்ய எர்ணாகுளம்  உத்தரவிட்டுள்ளார்.

You might also like