சிறப்பு அதிரடிப்படையினரால் யாழில் வீடொன்று சுற்றிவளைப்பு!

சிறப்பு அதிரடிப்படையினரால் யாழில் வீடொன்று சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரியை அண்மித்த பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமான குடியிருப்பில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையினரும், பொலிஸாரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக யாழ்ப்பாணம் – அராலி வீதிக்கும், நாவாந்துறை வீதிக்கும் இடையே பொலிஸ் தடை போடப்பட்டு சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

குறித்த நபர் அம்பாறை – சாய்ந்தமருதைச் சேர்ந்தவரெனவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாடகை வீடொன்றில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் (மின்குமிழ்) முகவர் எனவும் அதனை யாழ்ப்பாணத்தில் விநியோகிப்பதற்கு இங்கு வந்துள்ளதாகவும் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

எனினும் வாடகைக்கு குடியமர்ந்து சில மாதங்கள் ஆகிய போதும் அவர் மின்குமிழ் வியாபாரத்தில் ஈடுபடவில்லை என வீட்டு உரிமையாளரால் சந்தேகிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரிடம் பல கார்களிலும் வாகனங்களிலும் புதுப் புது நபர்கள் வந்து செல்வதையும் வீட்டு உரிமையாளரும் அயலவர்களும் கண்டுள்ளனர்.

இதனால் நாட்டில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து அந்த இளைஞன் மீது சந்தேகம் கொண்டவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனடிப்படையில் அங்கு விரைந்த சிறப்பு அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து சந்தேக நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like