வவுனியாவில் துவக்கு வெடித்ததில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா பூனாவை கோம்ப கஸ்கடுவ பகுதியில் இன்று (25.03.2017) மதியம் 2.00மணியளவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பூனாவை கோம்ப கஸ்கடுவ பகுதியிலுள்ள வயல் வெளிக்கு சென்ற இளைஞரோருவர்{ மஞ்சுல பிரசன்னா குமார ( வயது- 29) } அங்கு விலங்குகளுக்கு வைக்கப்பட்ட கட்டுத்துப்பாக்கியில் அகப்பட்டு காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடத்தில் கட்டுத்துவக்கு வைத்தது யார் என பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like