வவுனியா முழுவதும் 500க்கு மேற்பட்ட  பொலிஸார் மற்றும் முப்படையினர் குவிப்பு

வவுனியா முழுவதும் 500க்கு மேற்பட்ட  பொலிஸார் மற்றும் முப்படையினர் குவிப்பு

கொழுப்பில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து வவுனியா முழுவதும் 500க்கு மேற்பட்ட பொலிஸார் மற்றும் முப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பின் பல பாகங்களில் வாகனங்களிலிருந்து குண்டுகள் மீட்கப்படுவதுடன் தற்கொலை குண்டுதாரிகளும் நடமாடுவதாக பாதுகாப்பு பிரிவினர் விடுத்துள்ள அறிவித்தலையடுத்து நாட்டின் பல பாகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் இன்றையதினம் 300க்கு மேற்பட்ட பொலிஸார் , 100க்கு மேற்பட்ட இரானுவத்தினர் ,  20க்கு மேற்பட்ட விமான படையினர் , 30க்கு மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் மற்றும் அனைத்து புலனாய்வு பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ,

குறிப்பாக அனைத்து பிரிவினரும் இரவு பகலாக வவுனியாவிலுள்ள பிரதான ஆலயங்கள் , பள்ளிவாசல் , கிறிஸ்தவ தேவாலயங்கள், பௌத்த பன்சல மற்றும் முஸ்ஸிம் மக்களின் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகள் , வீதி சோதனை சாவடிகள் , வவுனியா நகர் போன்ற பகுதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

You might also like