வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நடப்பது என்ன? வெளியானது உண்மைத்தகவல்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நடப்பது என்ன? வெளியானது உண்மைத்தகவல்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தெரிவித்தார் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொழும்பிலிருந்து கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நாட்டிலிலுள்ள அனைத்து வைத்தியசாலையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் வழமையாக கடமையில் உள்ள பொலிஸாரின் எண்ணிக்கையினை விட இன்று (23.04.2019) சற்று அதிகமான பொலிஸார் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக நீண்டநேரமாக தரித்து நிற்கும் வாகனங்கள், பொதிகளுடன் உட்செல்லும் நபர்கள் , சந்தேகத்திடமாக நிற்கும் நபர்களை பொலிஸாரின் சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.

வைத்தியசாலையிலிருந்து பொதுமக்கள் மற்றும் நோயார்களை வெளியேற்றியதாக வெளிவந்த தகவல் உண்மைக்குபுறம்பானது . அவ்வாறான எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறவில்லை எனவும் வழமையை விட வைத்தியசாலையில் சற்று பாதுகாப்பு மாத்திரம் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

You might also like