வவுனியா நகரசபை ஊழியர்கள் நால்வர் சடலமாக மீட்பு : வைத்தியசாலையில் பொலிஸார் குவிப்பு

வவுனியா நகரசபை ஊழியர்கள் நால்வர் சடலமாக மீட்பு : வைத்தியசாலையில் பொலிஸார் குவிப்பு

வவுனியா நகரசபை ஊழியர்கள் நான்கு பேர் இன்று (25.04.2019) மதியம் குழி ஒன்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் விச வாயு தாக்கி மரணமடைந்துள்ளனர்.

வவுனியா தாண்டிக்குளத்தில் அமைந்துள்ள மாடு வெட்டும் கொள்கலன் பகுதியில் மாட்டின் கழிவுகள் கொட்டப்படும் குழியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த நகரசபை தொழிலாளர்களில் நால்வர் குறித்த குழியிலிருந்து தாக்கிய விச வாயு காரணமாக மரணமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கழிவுகளை குழியிலிருந்து அகற்றுவதற்காக குழியின் மூடியை திறந்து உள் இறங்கிய ஒருவர் திடீரென மயங்கி உள்ளே விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற சென்ற ஒவ்வொருவராக மயங்கி குழிக்குள் விழுந்து இறந்துள்ளதாக நேரில் கண்ட சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

You might also like