வவுனியா குருமன்காட்டில் தனிமையில் நின்ற மோட்டார் சைக்கிலினால் பதட்ட நிலை : பொலிஸார் குவிப்பு

வவுனியா குருமன்காட்டில் தனிமையில் நின்ற மோட்டார் சைக்கிலினால் பதட்ட நிலை : பொலிஸார் குவிப்பு

வவுனியா குருமன்காடு சந்தியில் தனிமையில் நின்ற மோட்டார் சைக்கிலினால் இன்று (26.04.2019) காலை 7.00 மணியளவில் அவ்விடத்தில் சற்று பதட்டமான நிலை காணப்பட்டது.

குருமன்காடு சந்தியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றிக்கு முன்பாக மோட்டார் சைக்கில் ஒன்று தனிமையில் நிற்பதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்தனர்.

இதன் போது குறித்த அச்சகத்திற்கு அருகேயுள்ள வர்த்தக நிலையத்தின் சி.சி.ரி.வி காணோளியினையும் பொலிஸார் சோதனையிட்டனர். அதன் பின்னர் குறித்த அச்சக நிலையத்தின் உரிமையாளருக்கு பொலிஸார் தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.

குறித்த மோட்டார் சைக்கில் தனது நண்பனது அவர் வேறு இடத்திற்கு செல்வதற்காக இவ்விடத்தில் தரித்து விட்டு சென்றதாக குறித்த அச்சக நிலையத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவரிடம் வாக்குமூலத்தினை பெற்றுக்கொண்ட பொலிஸார் மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலிலேயே விட்டு சென்றனர்.

மோட்டார் சைக்கில் மற்றும் வாகனங்களை நீண்ட நேரம் வீதியில் தரித்து விட்டு செல்லும் சமயத்தில் பெயர், தொலைபேசி இலக்கங்களை ஒட்டி விட்டு செல்லுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You might also like