சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்த ஆசிரியர்கள்

இந்தியாவில் பள்ளிசிறுமி ஒருவரை 8 ஆசிரியர்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்ததுடன் வீடியோவாகவும் பதிந்ததாக சிறுமியின் தந்தை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

ராஜஸ்தானின் பிகானீர் பகுதியை சேர்ந்த சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்தாண்டு நடந்த போதிலும், தற்போது சிறுமியின் தந்தை புகார் அளிக்க முன்வந்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ராஜஸ்தான் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

You might also like