சடலமாக வீட்டில் அப்பா! துக்கத்திலும் பரீட்சை எழுதிய மகன்: மனதை உருக்கும் சம்பவம்

தமிழ்நாட்டில் தந்தை இறந்து சடலமாக இருக்கும் நேரத்திலும் அவரின் மகன் பள்ளிக்கு சென்று பரீட்சை எழுதியிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் பாரதி, இவர் கூலி வேலை செய்து வருகிறார், இவருக்கு 2 மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

பாரதியின் கடைசி மகன் சுபாஷ்சுந்தர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது அவருக்கு பொது தேர்வு நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பாரதி சாலை விபத்தில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் மொத்த குடும்பமும் சென்று அழுது கொண்டிருக்க அவர் மகன் சுபாஷ்சுந்தர் மட்டும் போகவில்லை.

காரணம் அவர் பள்ளிக்கு சென்று அறிவியல் பாடம் பொதுத் தேர்வை கனத்த மனதுடன் எழுதியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து சுபாஷ் கூறுகையில், நான் படிப்பில் சுமாரான மாணவன் தான்.

என்னிடம் என் தந்தை நன்றாக படி, இல்லையேல் என்னை போல கஷ்டப்படுவாய் என அடிக்கடி கூறுவார்.

அதை நான் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டேன், தற்போது அவர் இறந்த பின்னர் அவர் கூறிய வார்த்தை தான் என் காதில் ஒலிக்கிறது.

அவர் சடலத்தை சென்று பார்ப்பதை விட அவரின் விருப்படி அழுகையை அடக்கி கொண்டு பரீட்சை எழுதினேன் என கூறியுள்ளார்.

You might also like