தந்தையை கூலிப்படை ஏவி கொன்ற மகள்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
தமிழகத்தில் தந்தையை அவரது மகளே கூலிப்படை ஏவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நாட்டின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராசப்பன் ( 69) . மருத்துவரான இவர் அங்குள்ள பகுதியில் கிளீனிக் நடத்தி வந்துள்ளார்.
இவரது மனைவி மணிமாலா மற்றும் மகள்கள் தீபிகா, அம்பிகா, மகன் கோகுல் ஆகியோர் சென்னையில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் சிலர் ராசப்பனை கத்தியை வைத்து குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இதைத் தொடந்து பொலிசார் நடத்திய தீவிரவிசாரணையில் அவரது மகள் தீபாவுக்கு இந்த கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது.
தீபா சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். போலியோ நோயின் பாதிப்பினால் தீபாவின் இரண்டு கால்களும் செயல் இழந்துள்ளது.
இவருக்கும் தன்னுடன் வேலை பார்க்கும் நாகையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஊனமுற்ற நிலையிலும் தான் குடும்பத்தை காப்பாற்ற போராடி வரும் நிலையில் தனது தந்தை குடும்பத்தை கவனிப்பதில்லை என்று அந்த இளைஞரிடம் தீபிகா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தந்தையை கொலை செய்து விடலாம் என்று அந்த இளைஞன் தீபாவிடம் கூறியுள்ளான். இதற்கு தீபாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன் பின்னரே இருவரும் கூலிப்படையை வைத்து ராசப்பனை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
மேலும் இது தொடர்பாக தீபாவிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும், தலைமறைவாகியுள்ள நாகை இளைஞனை பொலிசார் தேடிவருகின்றனர் என்று கூறப்படுகிறது.