அகதி முகாமிலிருந்து இலங்கைக்கு ஓடியுள்ள 2 இலங்கையர்கள்..!

தமிழகத்தின் அகதிமுகாமிலிருந்து, பெண் ஒருவரும் அவரது சிறுவயது மகளும், சட்டவிரோதமாக இலங்கைக்கு அனுப்பட்ட குற்றத்திற்காக 5 பேரை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டூர் பகுதியிலுள்ள இலங்கை அகதி முகாமிலிருந்த தாய் மற்றும் சிறுவயது மகள் தப்பி சென்றமையுடன் தொடர்புடைய 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறையினர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் அகதிமுகாமிலிருந்து தப்பி வந்தவர்கள், மிக நீண்டகாலமாக இலங்கை திரும்ப வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருந்துள்ளதோடு  குறித்த பெண் தூத்துக்குடி கடற்பகுதியிலிருந்து சட்டவிரோதனமான முறையில், படகு வழி பயணத்தின் மூலம் இலங்கை வந்துள்ளதாகவும், அவர்களுக்கு உதவியவர்களை பாம்பன் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like