இன்றைய ராசிபலன் 04.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன் 04.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்:

வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். இன்று எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும், சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். வெளிநாடுகளில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்று அதிகரிக்கும் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:

ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் அவசியம். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும்.

மிதுனம்:

இன்று உற்சாகமான நாளாக அமையும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

கடகம்:

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். உற்சாகமான நாள். அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

சிம்மம்:

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உற்சாகமான நாள். கொடுத்த கடன் திரும்ப வரும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

கன்னி:

காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படக்கூடும். இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். சகோதரர்கள் வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய் வழி உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

துலாம்:

வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

தனுசு:

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். தேவையற்ற எண்ணங்களால் மனதில் இனம் தெரியாத கலக்கம் உண்டாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

மகரம்:

மகர ராசிக்கு இன்றைய ராசி பலன் படி மனம் உற்சாகமாகக் காணப்படும். எதையும் பொறுமையாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்பட வாய்ப்புண்டு.

கும்பம்:

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. அவிட்டம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

மீனம்:

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

You might also like