உடம்பை பிட்டாக்க ஜிம்மிற்கு சென்றவர் உயிரை விட்ட பரிதாபம்

கோவாவில் உள்ள காலன்குட் கடற்கரை பகுதியில் உள்ள ஜிம்மில் பிரிட்டனைச் சேர்ந்த பால் ஜெரார்டு அட்கின்சன் என்கிற 58 வயது முதியவர் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக வந்துள்ளார்.

உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே திடீரென மயங்கி கீழே சரிந்து விழுந்த அவரை, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மரணடைந்த நபர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் இங்கிலாந்து தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.

காலன்குட் மடோவடோ பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்த உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்த முதியவர் மரணமடைந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like