வவுனியா பாலமோட்டையில் முன்னாள் போராளிக்கு உதவித்திட்டம் வழங்கி வைப்பு

வவுனியா பாலமோட்டையில் முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு மொன்றியல் துர்கை அம்மன் ஆலய 6ம் திருவிழா உபயகாரர்களால் இன்று (26.03.2017) காலை 10.30மணியளவில் 1,50,000லட்சம் ரூபா பெறுமதியான கோழிப்பண்ணையோன்று கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் பல இன்னல்களுக்கு உள்ளாகியுள்ள இக் குடும்பத்தில் ஜந்து பெண் பிள்ளைகள் இவர்களின் வாழ்வாதாரம் விவசாயம்.

இவர்களின் வாழ்வாதாரத்தினை மேன்படுத்தும் நோக்கோடு கனடா கியுபைக் மோன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதிகளின் ( truck drivers) ஒழுங்கமைப்பில் மொன்றியில் துர்க்கை அம்மன் ஆலய 6ம் திருவிழா உபகாரர்களினால் இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

 

You might also like