இன்றைய ராசிபலன் 05.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன் 05.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

துலாம்:

நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியங்கள் ஏற்பாடாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:

அரசு அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையும் உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

தனுசு:

தாயின் ஆதரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். குருவருளால் மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டு. தாய்வழி உறவினர்களின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கக்கூடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

மகரம்:

தந்தை வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பும் ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவார். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்கு இன்றைய ராசி பலன் படி மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். சதயம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

மீனம்:

வாழ்க்கைத் துணை வழியில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச் சுமையின் காரணமாக நேரத்துக்குச் சாப்பிடமுடியாது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை ஏற்படக்கூடும்.

மேஷம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்:

இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாமே அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். அனுபவபூர்வமான பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மிதுனம்:

தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். குடும்பத்தை முன்னிட்டு அதிகரிக்கும் பணிச்சுமை உங்களை சோர்வு அடையச் செய்யும். வியாபாரத்தில் கூடுதல் முதலீடு செய்யவேண்டி வரும். உற்சாகமான நாள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டு.

கடகம்:

முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

சிம்மம்:

பிள்ளைகள் வழியில் பெருமைப்படக்கூடிய சம்பவம் நிகழும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். இன்று பொறுமையும் சகிப்புத் தன்மையும் மிக அவசியம். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை உண்டாகும்.

கன்னி:

சிலருக்கு எதிர்பாராத தன லாபம் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். மாலையில் மனதில் உற்சாகம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

You might also like