வவுனியா தரணிக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

வவுனியா தரணிக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

வவுனியா தரணிக்குளம் 10ம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் கிணற்றுக்கருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது

குறித்த வீட்டில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய ராஜகுமாரன் என்பவரே சடலமாக மீட்பட்டவராவார்

திடீர் மரண விசாரனை அதிகாரி  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

You might also like