புயல்களுக்கு ஏன் பெயர்கள் வைக்க தொடங்கினார்கள் தெரியுமா? உடனே தெரிந்துகொள்ளுங்கள்..!

புயல்களுக்கு ஏன் பெயர்கள் வைக்க தொடங்கினார்கள் தெரியுமா? உடனே தெரிந்துகொள்ளுங்கள்..!

புயல் வருகிறது என்றாலே அது எவ்வாறு தாக்கும், எத்தகைய சேதங்களை ஏற்படுத்தும் என்றெல்லாம் தான் நம் நினைவுக்கு முதலில் வருவது. இத்தகைய புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்? யார் முதலில் பெயர் வைத்தது? இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் எத்தனை? இதுபோன்ற பல சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இன்று நாம் பார்க்கலாம்.

ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள்:

வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையை சரியாக புரிந்து கொண்டு செயல்படுவதற்காகவும், ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் புயல்களுக்கு பெயர் வைக்க தொடங்கினார்கள்.

மேலும் ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம், எந்தெந்த புயல்கள் எந்த திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.

யார் முதலில் பெயர் வைத்தது?

இரண்டாம் உலகப் போர் காலத்தில் புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர். ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978-களில் இருந்து ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

பின்பு வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறையானது புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையமானது 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.

இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் !

2005-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பானூஸ் என்ற புயலும்,

2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிஷா என்ற புயலும்,

2010-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜல் என்ற புயலும்,

2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தானே என்ற புயலும்,

2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீலம் என்ற புயலும்,

2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மடி என்ற புயலும்,

2016- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வர்தா என்ற புயலும்,

2017- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் – ஒகி என்ற புயலும்,

2018- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் – கஜா என்ற புயலும், தமிழகத்தை இதுவரை தாக்கியுள்ளது.

தமிழகம் தவிர்த்து பிற மாநிங்களிலும் பல்வேறு புயல்கள் தாக்கியுள்ளது. தற்போது ஃபானி என்ற புயல் தமிழத்தை கடுமையாக தாக்கும் என்று அஞ்சப்பட்டது. ஆனால் திசைதிரும்பிய அந்த புயல், ஒரிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை கடுமையாக தாக்கி கரையை கடந்தது.

You might also like