56 நாட்கள் கடலில் உணவு, தண்ணீர் இன்றி தவித்த மீனவர்! உயிர் தப்பிய அதிசயம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஜெனரல் சாண்டோஸ் என்னும் கடற்கரையிலிருந்து கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி ரோலண்டோ ஓமங்கஸ் என்னும் 21 வயது மீனவர், தனது உறவினர் ரெனியல் ஓமங்கஸ் என்பவருடன் இணைந்து பசிபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்றார்.

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, திடீரென எதிர்பாராத விதமாக வீசிய புயலின் காரணமாக அவர்களது படகு, சிதைந்தது.

இதனால் உணவு, குடிநீரின்றி அவர்கள் இருவரும் கடலில் தத்தளித்தனர்.

இந்த போராட்டத்தில் உறவினர் ரெனியல் மரணம் அடைந்தார்.

இருப்பினும் மனவலிமையுடன் ரோலண்டோ 56 நாட்கள் கடலில் நீந்தி நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் கரையொதுங்கினார்.

கடலில் தத்தளித்த நாட்களில் மழைநீரையே குடிநீராகப் பயன்படுத்தி வாழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.

தற்போது ரோலண்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல் சீரான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

You might also like