வவுனியா கோதண்டர் நொச்சிக்குளத்தில் சிறப்பாக இடம்பெற்ற நுங்குத்திருவிழா

வவுனியா கோதண்டர் நொச்சிக்குளத்தில் சிறப்பாக இடம்பெற்ற நுங்குத்திருவிழா

வவுனியா கோதண்டர் நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு அருகே நுங்குத்திருவிழா இன்று (11.05.2019) வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

”ஊருக்குத் தெரியும்படியாக நுங்கு குடித்து கொண்டாடுதலும் நாட்டுக்கோழி விருந்தோம்பலும்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நுங்குத்திருவிழா சுயாதீன தமிழ் இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

இவ் நுங்குத்திருவிழாவிற்கு 2000க்கு மேலான பனை விதைகளை விதைத்த மலர்மகள் விளையாட்டுக்கழகத்தினர் அனுசரணை வழங்கியிருந்ததுடன் இவ் திருவிழாவில் நுங்கு குடித்தல் , நுங்கு குளித்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

இத் திருவிழாவில் இளைஞர் ,யுவதிகள் என 20க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இன்றைய விடுமுறை தினத்தினை நுங்குத்திருவிழாவில் கொண்டாடிக்களித்தனர்.

You might also like