புலனாய்வுப் பிரிவிகளின் முன்னாள் பிரதானிகள் விரைவில் கைதாகுவர்!
இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேன மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கபில ஹெந்தவிதாரண ஆகியோரை கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட பல குற்றச் செயல்களுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த குற்றச் செயல்களுக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரத்தியேகமான குழு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் மேற்கூறிய அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த குழு இயங்கி வந்தமையும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
இந்தக் குழுவினர் யுத்தத்துடன் சம்பந்தப்படாத ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தவிர லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் சரத் பொன்சேகா வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அமல் கருணாசேன மற்றும் கபில ஹெந்தவிதாரண ஆகியோர் விரைவில் கைது செய்யப்படலாம் என பேசப்படுகிறது