இலங்கையில் மற்றுமொரு தற்கொலை தாக்குதலுக்கு தயாராகும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்!

இலங்கையில் மற்றுமொரு தற்கொலை தாக்குதலுக்கு தயாராகும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்!

இலங்கையில் மீண்டும் தற்கொலை தாக்குதலை நடத்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் மற்றுமொரு குழு தயாராக இருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரியின் தகவலின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்படுவதாக பிபிசி குறிப்பிட்டுள்ளது.

மரபுவழி பயங்கரவாத கோட்பாடுகளின் அடிப்படையில் ஒவ்வொரு தற்கொலை குண்டுதாரியும் தாக்குதல் நடத்துவதற்கு குறைந்து 5 பேரின் உதவி தேவை. அந்த வகையில் இரண்டாம் தடவையும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் இன்னும் 45 பேர் இலங்கையில் பதுங்கியுள்ளனர். அதனடிப்படையில் 9 தற்கொலை குண்டுதாரிகள் குண்டுகளை வெடிக்க வைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டதாக பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 70 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் அந்த வலையமைப்பு முழுமையாக அழிக்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like