வவுனியா செட்டிக்குளத்தில்  ரயரினை எரித்த நபரினால் பதட்டம் : ஒருவர் கைது

வவுனியா செட்டிக்குளத்தில்  ரயரினை எரித்த நபரினால் பதட்டம் : ஒருவர் கைது

வவுனியா செட்டிக்குளத்தில் வீதியில்  நபரோருவர் நேற்றையதினம் (11.05.2019) இரவு 10.00மணியளவில் ரயரினை எரித்தமையினால் அவ்விடத்தில் சற்று பதட்ட நிலை காணப்பட்டது.

செட்டிக்குளம் பகுதியில் வீதியின் மத்தியில் ரயினை எரித்த நபரினால் அவ்விடத்தில் சற்று பதட்டமான நிலை காணப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் செட்டிக்குளம் முதலியார்குளம் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

மதுபோதையின் உச்சத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like