முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்காக வவுனியாவில் கண்ணீர் சிந்திய உறவுகள்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்காக வவுனியாவில் கண்ணீர் சிந்திய உறவுகள்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வன்னி குறோஸ் தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா கற்குழி வீதியில் அமைந்துள்ள வன்னி குறோஸ் அமைப்பின் காரியாலயத்தில் இன்று (12.05.2019) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றது.

வன்னி குறோஸ் தாயக நினைவேந்தல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவப்பிரகாசம் சிவமோகன் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன்,

அதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் மெழுகுவர்த்தி கொழுத்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

அதனைத்தொடர்ந்து உயிர்நீத்த மக்களுக்காக மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இவ் அஞ்சலி நிகழ்வில் இளைஞர் ,யுவதிகள் , பொதுமக்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like