கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

நெத்தலியாறு பகுதியில் வெடிபொருட்கள் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகறிற்கு  வழங்கப்பட்ட இரகசியத்தகவலுக்கு அமைய  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கிளிநொச்சி பொலிஸ்  நிலைய  தலைமைப் பொலிஸ் அத்தியட்சகர் , தர்மபுரம்  பொலிஸ்  நிலையப்  பொறுப்பதிகாரி ,கிளிநொச்சி குற்றத்தடகவியல் பொலிசார்  கொண்ட   குழுவினர்  நெத்தலியாறு  பகுதிக்குச் சென்று  ஆற்ரின்  நடுவே வைக்கப்பட்டிருந்த பை  ஒன்றில்  வெடிபொருள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன்  குறித்த பகுதி  புதுக்குடியிருப்பு  பொலிசாரின் கட்டுப் பாட்டில்  வருகின்றமையால்  புதுக்குடியிருப்புப் பொலிசாரு சம்பவ இடத்திற்கு வருகைதந்துள்ளனர்.

இருப்பினும்  குறித்த வெடிபொருள் என்ன என்பது தொடர்பில் ஆராயவும் அதனை  மீட்க்கவும் பொலிஸ்  விசேட  அதிரடிப்படையினரின் உதவி கோரப்பட்ட நிலையில் இன்னமும்  குறித்த வெடிபொருட்கள்  மீட்கப்படவில்லை.

இருப்பினும் அப்பையினுள் மூன்று அல்லது நான்கு மோட்டார் வகைக்  குண்டுகள் இருக்கலாம் என  பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

17343015_1321561177922778_7890720094102542838_nunnamed (2)unnamed (3)unnamed (4)unnamed (5)unnamed (6)unnamed (7)unnamed (8)unnamed (9)unnamed
You might also like