தேசிய ரீதியில் சைக்கிள் ஓட்டத்தில் வெற்றிபெற்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கினார் மஸ்தான் எம்.பி.

தேசிய ரீதியில் சைக்கிள் ஓட்டப்போட்டியில் பங்கு பற்றி மூன்றாமிடம் பெற்ற பாலச்சந்திரன் தர்சிகா என்ற மாணவிக்கு புலமபெயர் தமிழரின் நிதியளிப்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தானால் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பா. தர்சிகா சைக்கிள் ஓட்டப்போட்டியில் பங்கேற்று மாகாண மற்றும் தேசிய ரீதியில் வெற்றி பெற்று வந்த நிலையில் சொந்தமாக தன்னிடம் துவிச்சக்கரவண்டி இல்லை எனவும் அயலவர்கள் மற்றும் நண்பிகளின் துவிச்சக்கரவண்டியை பயன்படுத்தியோ போட்டியில் ஈடுபடுவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தானிடம் தெரிவித்திருந்த நிலையில் புலம் பெயர் தமிழரான சிவரஞ்சினி என்பவரின் நிதியுதவியில் துவிச்சக்கரவண்டியொன்றினை கொள்வனவு செய்து இன்று குறித்தமாணவியின் வீட்டிற்கு சென்று வழங்கி வைத்தார்.

இதன்போது புலம்பெயர் தமிழரான சிவரஞ்சினி மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலளார் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

 

You might also like