இந்து நோயாளிக்கு உதவ ரமலான் நோன்பை விட்ட முஸ்லிம் இளைஞர் : குவியும் பாராட்டுக்கள்

இந்து நோயாளிக்கு உதவ ரமலான் நோன்பை விட்ட முஸ்லிம் இளைஞர் : குவியும் பாராட்டுக்கள்

இந்து நண்பர் ஒருவருக்கு இரத்த தானம் செய்ய ரமலான் நோன்பை விட்ட முஸ்லிம் இளைஞர் குறித்து அதிகம் பேசப்படுகின்றது.

அசாம் மாநிலம் டர்ராங் மாவட்டத்தின் நிர்வாக தலைநகராக உள்ள மங்கல்டோய் பகுதியைச் சேர்ந்த பனாவுல்லா அகமது மற்றும் தபாஷ் பகவதி ஆகியோர் நண்பர்கள் ஆவர்.

இருவரும் மனிதநேயம் என்ற பேஸ்புக் குழுவை இயக்கி வருகின்றனர்.

ரம்ஜான் மாதம் என்பதால் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நோன்பு தொடங்கியது.

பனாவுல்லா முஸ்லிம் என்பதால் அவர் தற்போது ரமலான் நோன்பு தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் இந்து தத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பி பாசிட்டிவ் ரக ரத்தம் உடனடியாக தேவைப்படுகிறது என்று பகவதியிடம் செல்போனில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பகவதியும் அகமதும் மருத்துவமனைக்கு சென்று தங்கள் பேஸ்புக் பக்கத்தில் உள்ள ரத்ததானம் அளிப்பவர்களை தொடர்பு கொண்டனர்.

அதில் சிலர் வந்து ரத்தம் கொடுக்க இயலாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து அகமது அதே ரத்தவகையை சேர்ந்தவர் என்பதால் அவர் கொடுக்கலாம் என நினைத்தார்.

பொதுவாக முஸ்லிம் சகோதர சகோதரிகள் ரமலான் நோன்பு இருக்கும்போது அவர்களது ரத்தம் சிந்தக் கூடாது என்பது ஐதீகம்.

இந்த நிலையில் ஒரு உயிரை காக்க நோன்பை கைவிடுவது என அகமது முடிவு எடுத்தார்.

பின்னர் நோன்பை கைவிட்டுவிட்டு ரத்தம் கொடுத்தார். இதனால் அந்த நோயாளியின் உயிரும் காக்கப்பட்டது.

இதுகுறித்து அகமது கூறுகையில்,

ரத்தம் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தவுடன் எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. உடலளவில் ஆரோக்கியமாக இருப்பவர்கள் அனைவரும் ரத்தம் கொடுக்க தகுதியானவர்கள். ரத்த தானம் என்பது கடவுளுக்கு செய்யும் தொண்டை போன்றது என்றார்.

இவருடைய செயலுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

You might also like